மண்டல பூஜையையொட்டி டிச.25, 26-ம் தேதிகளில் நெரிசலை தவிர்க்க சபரிமலையில் புதிய கட்டுப்பாடு
சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வரும் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.

தேனி: சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வரும் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவ. 16-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தினமும் சராசரியாக 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 96,853 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
What's Your Reaction?