தி.மலை அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி மகா தேரோட்டம் இன்று (டிச.10) வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி மகா தேரோட்டம் இன்று (டிச.10) வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்தைத் தொடர்ந்து, மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி, தேவ மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. காலை மற்றும் இரவு நேர உற்சவத்தில், பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்தனர். 6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்களும் காலையிலும், வெள்ளி தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகள் இரவும் பவனி வந்தனர்.
What's Your Reaction?