விமானங்கள் ஏன் விண்வெளிக்குச் செல்வதில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்
நல்ல கேள்வி வெண்பா. நாம் பார்க்கக்கூடிய, பயணம் செய்யக்கூடிய விமானங்கள் எல்லாம் காற்று மண்டலத்தில் பயணிக்கின்றன. காற்றை உந்தித் தள்ளி செயல்படும் விதத்தில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விமானங்கள் ஏன் விண்வெளிக்குச் செல்வதில்லை, டிங்கு? - வி. வெண்பா, 4-ம் வகுப்பு, டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளி, அரக்கோணம்.
நல்ல கேள்வி வெண்பா. நாம் பார்க்கக்கூடிய, பயணம் செய்யக்கூடிய விமானங்கள் எல்லாம் காற்று மண்டலத்தில் பயணிக்கின்றன. காற்றை உந்தித் தள்ளி செயல்படும் விதத்தில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விண்வெளி என்பது காற்று இல்லாத வெற்றிடம். அதற்கு ஏற்றவாறு விண்வெளிக்குச் செல்லும் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் சாதாரணமாக நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல இயலாது. ஆனாலும் சில பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
What's Your Reaction?