புதுமைகள் அடங்கிய ‘ஆம்ரா’ மாம்பழ உணவுத் திருவிழா!
ஜூஸ், கார, இனிப்பு வகைகள் என ஒவ்வொரு உணவுக்கும் ஏற்ப மாம்பழ வகைகளைத் தேர்ந்தெடுத்து மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. சைவ, அசைவ உணவுகள் இரண்டோடும் மாம்பழத்தின் சுவை ஒத்துப்போவது சுவைப்பவருக்குப் புதுவித அனுபவத்தைத் தரும்.

கோடைக்காலம் என்றால் நினைவுக்கு வரும் சில விஷயங்களில் மாம்பழத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, இமாம் பசந்த் போன்று பல்வேறு வகையான மாம்பழங்கள் இந்தியாவில் விரும்பி உண்ணப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் அதிகம் விரும்பப்படும் இந்த மாம்பழங்களை வைத்து உணவுத் திருவிழா ஒன்றில் புதுமைகளைப் புகுத்தி இருக்கிறார் பிரபல சமையல் கலைஞரும் உணவு சார்ந்த பயணம், வரலாற்றை ஆவணப்படுத்திவருபவருமான ராகேஷ் ரகுநாதன்.
ஆம்ரா - உணவுத் திருவிழா: பொதுவாக மாம்பழத்தைப் பயன்படுத்தி குழம்பு வகைகள், மில்க் ஷேக், ஐஸ் கிரீம் போன்ற உணவுகளைச் சமைக்கலாம். ஆனால் சாலட், ’மாக்டெயில்’ தொடங்கி மாம்பழ பிளாட்டர், மாம்பழ டிக்கா வரை பல்வேறு உணவு வகைகளில் மாம்பழத்தைச் சேர்த்து புது மெனுவை உருவாக்கி உள்ளார் ராகேஷ். ’ஆம்ரா’ எனும் உணவுத் திருவிழாவில் சுவைக்க சுமார் 15 மாம்பழ உணவு வகைகளை அவர் தயாரித்துள்ளார்.
What's Your Reaction?