ஆர்எஸ்எஸ் - கோவை பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: சிவவேள்வி பூஜையில் பங்கேற்கிறார் மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பேரூர் ஆதீனம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 23-ம் தேதி பாரம்பரிய சிவவேள்வி பூஜை   நடக்கிறது. இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார். 

Jun 21, 2025 - 20:10
 0  3
ஆர்எஸ்எஸ் - கோவை பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: சிவவேள்வி பூஜையில் பங்கேற்கிறார் மோகன் பாகவத்

கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பேரூர் ஆதீனம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 23-ம் தேதி பாரம்பரிய சிவவேள்வி பூஜை நடக்கிறது. இவ்விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.

கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கோவையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரூரில் பேரூர் ஆதீனத்தைத் கி.பி.11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப்பெருமான் தோற்றுவித்தார். அதன் பின்னர், அவரின் அருள்வழியில் 24-ஆம் குருமகாசந்நிதானமாக சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow