வட அமெரிக்கா வரை திருப்பாவை பிரச்சாரம்; மார்கழி 1-ம் தேதி யாத்திரை தொடக்கம்: சடகோப ராமானுஜ ஜீயர் தகவல்

ஆந்திர மாநிலம் ஹைதரா​பாத்​தில் 216 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையை பிரதிஷ்டை செய்த ஸ்ரீதிர்​தண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர், மார்கழி முதல் நாளில் ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்து மங்களாசாசனம் செய்​வதற்காக வரும் 15-ம் தேதி ஸ்ரீவில்​லிபுத்​தூர் வருகிறார்.

Dec 12, 2024 - 01:15
 0  4
வட அமெரிக்கா வரை திருப்பாவை பிரச்சாரம்; மார்கழி 1-ம் தேதி யாத்திரை தொடக்கம்: சடகோப ராமானுஜ ஜீயர் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், மணவாள மாமுனிகள் மடத்​தில் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ஆந்திர மாநிலம் ஹைதரா​பாத்​தில் 216 அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலையை பிரதிஷ்டை செய்த ஸ்ரீதிர்​தண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர், மார்கழி முதல் நாளில் ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்து மங்களாசாசனம் செய்​வதற்காக வரும் 15-ம் தேதி ஸ்ரீவில்​லிபுத்​தூர் வருகிறார்.

வரும் 15-ம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை இளையராஜா இசையமைத்த ஆண்டாள் பாசுரம் கச்சேரி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்​சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்​சி​யில் பங்கேற்க வருவதாக இளையராஜா தெரிவித்​துள்ளார். மார்கழி 1-ம் தேதி காலை மணவாள மாமுனிகள் மடத்​தில் திரு​வாராதனை, தீர்த்த கோஷ்டி நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow