பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.5) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.11-ம் தேதி நடைபெற உள்ளது.

பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.5) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.11-ம் தேதி நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (ஏப்.5) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
What's Your Reaction?