கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று (ஏப்.5) காலை பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.13-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Apr 5, 2025 - 16:10
 0  4
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று (ஏப்.5) காலை பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.13-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோயிலை வந்தடைந்தது. காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow