திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை, வைணவ சம்பிரதாயம், பண்டைய பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் மையமாகத் திகழ்கிறது.

Sep 27, 2025 - 13:10
 0  3
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகையில் நவராத்திரி விழா

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை, வைணவ சம்பிரதாயம், பண்டைய பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் மையமாகத் திகழ்கிறது. வைணவத்தைப் பரப்புவதையும், பக்தி மார்க்கப் பணிகளை செய்வதையும் தலையாயப் பணியாகக் கொண்டு இம்மையம் செயல் பட்டு வருகிறது.

வைணவ சம்பிரதாயம் செழித்து வளர, பகவத் ராமானுஜர் சீரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். தனது ஆயிரக்கணக் கான சீடர்களில் இருந்து 74 பேரைத் தேர்வு செய்து, ஸ்ரீமன் நாராயணனின் சேவைக்காக நியமித்தார். இவர்கள் வைணவ சம்பிரதாயத்தின் கடமைகளை உலகம் முழுவதும் பரப்பு வதையே தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow