கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா: பெருவுடையாருக்கு 500 கிலோ காய், கனிகளால் அலங்காரம்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

அரியலூர்/தஞ்சாவூர்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் மூலவராக உள்ள பதின்மூன்றரை அடி உயரம், அறுபது அடி சுற்றளவு கொண்ட லிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமி தினமான நேற்று 100 மூட்டை பச்சரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 13-ம் தேதி கணக்க விநாயகருக்கும், நேற்று முன்தினம் பிரகதீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 100 மூட்டை பச்சரிசி சாதம் சமைத்து, லிங்கத்தின் மீது சாத்தப்பட்டது. மேலும், சுவாமியை மலர்களால் அலங்கரித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
What's Your Reaction?