திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று (மார்ச் 12) காலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

Mar 12, 2025 - 12:45
 0  4
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று (மார்ச் 12) காலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

மாசித் திருவிழா: தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் முக்கிய நிகழ்ச்சிகளான சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி வீதி உலா கடந்த 9-ம் தேதியும், பச்சை சாத்தி வீதி உலா 10-ம் தேதியும் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow