ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ரோப்கார் அமைக்க ரூ.32 கோடி  செலவாகும் என்று கருத்துரு பெறப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கூடுதல் நிதி ஒதுக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் தொடங்கப்படும், என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

Mar 24, 2025 - 16:25
 0  4
ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: “ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு நடைபெறும். டிஜிட்டல் சர்வே, ட்ரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்றும் முடிவுற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ரோப்கார் அமைக்க ரூ.32 கோடி செலவாகும் என்று கருத்துரு பெறப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கூடுதல் நிதி ஒதுக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் தொடங்கப்படும்,” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பேரவையில் இன்று (மார்ச் 24) கேள்வி நேரத்தின்போது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, “திருப்பரங்குன்றம் கோயிலின் கும்பாபிஷேகம் உரிய காலம் தாண்டி சென்று கொண்டிருக்கிறது, ரோப்கார் வசதிக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் அதனுடைய திட்டமே செயல்படாமல் இருக்கிறது. முதல்படைவீடாம் திருப்பரங்குன்றத்துக்கு சிறப்பு நிதி ஏதும் ஒதுக்காத காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow