எழுதாதீர்கள்... | தேன் மிட்டாய் 43
ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அருவி ஒன்று உங்களுக்குள் பொங்கிப் பீறிட ஆரம்பிக்கும். எழுது, எழுது, உன்னால் முடியும் என்று அது உங்களை ஊக்குவிக்கும். எழுதாதீர்கள்.

‘வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள், சார்லஸ் புகோவ்ஸ்கி என்று கேட்டால் பொசுக்கென்று இப்படியா செல்வது? ஓர் எழுத்தாளராக இருந்துகொண்டு எழுதாதே என்று மற்றவர்களைப் பார்த்து எப்படிச் சொல்ல முடிகிறது உங்களால்?’ இப்படிக் கோபத்தோடு என்னைக் கேட்பவர்களுக்கும் சேர்த்து நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எழுதாதீர்கள். உற்சாகமான நாள். இன்று ஒரு கதை எழுதினால் நிச்சயம் நன்றாக வரும் என்று நம்புகிறீர்களா? எழுதாதீர்கள்.
ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அருவி ஒன்று உங்களுக்குள் பொங்கிப் பீறிட ஆரம்பிக்கும். எழுது, எழுது, உன்னால் முடியும் என்று அது உங்களை ஊக்குவிக்கும். எழுதாதீர்கள். ஒரு மோசமான கவிதையை வாசிக்கும்போது, நாமே ஏன் எழுதக் கூடாது? நிச்சயம் இதைவிட நன்றாக எழுத முடியும் என்னும் உறுதியான நம்பிக்கை தோன்றும். எழுதாதீர்கள்.
What's Your Reaction?