நம்மை பற்றி நாம் சொல்லும் கதை முக்கியம்! - மார்க்கெட்டிங் நிபுணர் சாய்ராம் கிருஷ்ணன் பேட்டி

மார்க்கெட்டிங் உத்திகளுக்கு பெயர்போன விங்கிபை (wingify) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அவர், தற்போது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அட்டாமிக்வொர்க் (atomicwork) ஸ்டார்ட் அப்பின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவராக உள்ளார்.

Nov 11, 2024 - 15:48
 0  3
நம்மை பற்றி நாம் சொல்லும் கதை முக்கியம்! - மார்க்கெட்டிங் நிபுணர் சாய்ராம் கிருஷ்ணன் பேட்டி

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 22 | Marketing is everything and everything is marketing. அமெரிக்க மார்க்கெட்டிங் ஜாம்பவானான ரெஜிஸ் மெக்கென்னா (Regis McKenna), 1990-களில் இணையம் அறிமுகமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மார்க்கெட்டிங் குறித்து கூறிய பிரபலமான கூற்று இது. தற்போதைய சமூக ஊடக காலகட்டத்தில் மார்க்கெட்டிங் பற்றி சொல்லத் தேவையில்லை. உலகின் ஒவ்வொரு அசைவிலும் மார்க்கெட்டிங் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“தற்போதைய சூழலில் உங்களை நீங்கள் சரியாக மார்க்கெட்டிங் செய்வதன் மூலமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். அந்தவகையில், ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய திறனாக மார்க்கெட்டிங் மாறியுள்ளது” என்கிறார் இந்திய SaaS (software as a service) துறையில், கவனிக்கப்படும் மார்க்கெட்டிங் நிபுணர்களில் ஒருவரான சாய்ராம் கிருஷ்ணன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow