விழிப்புணர்வு: கிசுகிசு தொனியில் ஓர் அதிரடிப் பாடல்!
வளர்ச்சி என்னும் பெயரால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அதிகார மையங்களைத் தன்னுடைய ‘ராப்’ பாடல் களின் மூலம் எதிர்க்கும் கலகக் குரல் பாடகி சோஃபியா அஷ்ரப்

வளர்ச்சி என்னும் பெயரால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அதிகார மையங்களைத் தன்னுடைய ‘ராப்’ பாடல் களின் மூலம் எதிர்க்கும் கலகக் குரல் பாடகி சோஃபியா அஷ்ரப்.
வட சென்னை மக்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்தும் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகையால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ‘காத்த வர விடு மூச்ச விட விடு’ என்னும் பாடலில் பாடியிருப்பார். இவரின் ‘கொடைக்கானல் வோன்ட்’ பாடல், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிப்போரைத் துணிச்சலாகக் கேள்விக்கு உள்படுத்திய பாடல். அண்மையில் சோஃபியா வெளியிட்டிருக்கும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுப் பாடல் சமூகவலைதளத்தில் கவனத்தை ஈர்த்துவருகிறது.
What's Your Reaction?