1008 லிங்கங்களுடன் ராஜராஜ லிங்கேஸ்வரர் ஆலயம்

விருதுநகர் அருகே 1008 லிங்கங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது ராஜராஜ லிங்கேஸ்வரர் ஆலயம். விருதுநகர் அருகே மல்லாங்கிணறு சாலையில் உள்ளது சித்தல்குடில்.

Dec 26, 2024 - 18:15
 0  2
1008 லிங்கங்களுடன் ராஜராஜ லிங்கேஸ்வரர் ஆலயம்

விருதுநகர் அருகே 1008 லிங்கங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது ராஜராஜ லிங்கேஸ்வரர் ஆலயம். விருதுநகர் அருகே மல்லாங்கிணறு சாலையில் உள்ளது சித்தல்குடில். இதோடு இணைந்த கோயிலாக கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் 6 சக்கரங்களுடன் கூடிய ரதம் போன்ற அமைப்பில், தாமரை நடுவே 36 அடி உயரத்துக்கு 38 டன் எடையுள்ள கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. லிங்கத்தின் வெளிப்பகுதியில் 1008 லிங்கம், 108 நந்தி, 63 நாயன்மார்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 நவக்கிரகங்கள், 10 தசாவதாரங்கள், 8 அஷ்ட லட்சுமிகள், 5 பஞ்ச பூதங்கள், சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, கன்னி விநாயகரும், லிங்கத்தின் மேல் பகுதியில் 8 திசைகளை நோக்கி 8 அஷ்ட நந்திகளும் அமைக்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow