செயலும் அவனே... செயலின்மையும் அவனே | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 35
ஓர் ஆசனத்தில் அமர்வதால் மட்டும் ஒருவன் அரசன் ஆகிவிடுவதில்லை. அவன் ஆணை மக்களால் மறுப்பின்றிப் பின்பற்றப்படும் போது தான் அவன் உண்மையான அரசன் ஆகிறான். அவன் ஆட்சி சக்கரம் செல்லும் தொலைவே அவன் செல்வாக்கைத் தீர்மானிக்கிறது.

ஓர் ஆசனத்தில் அமர்வதால் மட்டும் ஒருவன் அரசன் ஆகிவிடுவதில்லை. அவன் ஆணை மக்களால் மறுப்பின்றிப் பின்பற்றப்படும் போது தான் அவன் உண்மையான அரசன் ஆகிறான். அவன் ஆட்சி சக்கரம் செல்லும் தொலைவே அவன் செல்வாக்கைத் தீர்மானிக்கிறது. இதனால் தான் சிலப்பதிகாரத்தின் முதல் காதையான மங்கல வாழ்த்துக் காதையில் கூட 'ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்' என்று சோழ மன்னனைப் போற்றி இளங்கோவடிகள் எழுதினார்.
இதே அணுகுமுறையை ஆறாம் பாசுரத்தில் (1.1.6) மாயோனாகிய திருமாலிடத்தில் நம்மாழ்வார் கையாள்கிறார்.
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமோர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றுமோர் இயல்வொடு நின்ற எம் திடரே
What's Your Reaction?