விதைகள் எங்கே போயின? | கதை

அந்த ஊரில் நான்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. நான்கு பள்ளிகளுக்கும் இடையே பசுமை அறிவியல் வார விழா போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அனைவரும் ஒரே நாளில் விதைகளை ஊன்றிட வேண்டும்.

Oct 1, 2025 - 13:30
 0  3
விதைகள் எங்கே போயின? | கதை

அந்த ஊரில் நான்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. நான்கு பள்ளிகளுக்கும் இடையே பசுமை அறிவியல் வார விழா போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அனைவரும் ஒரே நாளில் விதைகளை ஊன்றிட வேண்டும். மூன்று வாரங்கள் கழித்து எந்த அணியின் விதைகள் அதிகம் முளைவிட்டு வளர்ந்து இருக்கின்றனவோ அந்தப் பள்ளிக்கு விருது வழங்கப்படும் இப்படி அறிவிப்பு வெளியான உடனே நித்யா, ஜனார்த்தனன், கவிமணி, கண்ணகி ஆகியோர் அடங்கிய குழு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டனர். எனவே அவர்களின் பெயர்களைப் போட்டி நடத்துகிறவர்களுக்குத் தலைமை ஆசிரியர் அனுப்பிவிட்டார்.

ஜனார்த்தனன் அவரை, கண்ணகி வெண்டை, நித்யா கத்திரி, கவிமணி மிளகாய் விதைகளை எடுத்துவந்து அறிவியல் ஆய்வகத்தில் கொடுத்தார்கள். தோட்டம் போடுவதற்கான சரியான இடத்தைப் பள்ளிக்கு உள்ளேயே அவர்கள் தேர்வுசெய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து தருகிறேன் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow