கடைசி டாஸ்மேனியப் புலி! | வரலாறு முக்கியம் மக்களே! - 07
1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார்.

1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார். அழிவின் விளிம்பில் இருந்த டாஸ்மேனியப் புலியை வேட்டையாடுவது சட்ட விரோதம் என்பதால், அந்த டாஸ்மேனியப் புலி குறித்த ஆவணங்கள் எதுவும் உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்படவில்லை.
1936, செப்டம்பர் மாதத்தில் அது நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. டாஸ்மேனியாவின் காட்டுப்பகுதியில்தான் உலகின் கடைசி ஒரு சில டாஸ்மேனியப் புலிகள் எஞ்சியிருந்ததாக நம்பப்பட்டது. அதேநேரம் ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இறந்து போன டாஸ்மேனியப் புலி ஓர் ஆண். அதன் பெயர் பெஞ்சமின். அதுவே உலகின் கடைசி டாஸ்மேனியப் புலி என்று செய்திகள் வெளியாயின.
What's Your Reaction?