‘மாயக்கூத்து’ படம் எப்படி? - கதாபாத்திரங்களிடம் சிக்கும் படைப்பாளி!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலியில் புகழ்பெற்று விளங்கியவர் நாடகாசிரியர் லூகி பிராண்டெல்லோ (1867-1936)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலியில் புகழ்பெற்று விளங்கியவர் நாடகாசிரியர் லூகி பிராண்டெல்லோ (1867-1936). உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது ‘சிக்ஸ் கேரக்டர்ஸ் இன் சர்ச் ஆஃப் அன் ஆதர்’ என்கிற நாடகத்தில், அவர் உருவாக்கிய 6 கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வந்து உரையாடுவது போன்ற உத்தி முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
திரை வெளியில், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரை இந்த உத்தி பல படங்களில் ஊறுகாய்போல் தொட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ராகவேந்திரா (இணைந்து எழுதியிருப்பவர் எம்.ஸ்ரீனிவாசன்), இந்தச் சுவாரசியமான உத்தியை ஒரு த்ரில்லர் திரைக்கதைக்குள் முழு வீச்சில் பயன்படுத்துவதில் போதிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
What's Your Reaction?