கிளியோபாட்ராவின் மூக்கு | தேன் மிட்டாய் 48
வரலாறு என்றால் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பிக்கொண்டே போவதாம். சரி, அப்படி என்ன தோண்டித் துருவி இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். ‘கிளியோபாட்ரா உயரமா, குள்ளமா?’ இது ஒரு கேள்வி.

வரலாறு கற்காவிட்டால் என்னாகும் தெரியுமா? உலக அறிவு எவ்வளவு முக்கியம் தெரியுமா? கடந்த காலத்திடமிருந்து கற்காவிட்டால் நமக்கெல்லாம் எதிர்காலமே கிடையாது என்பதை அறிவாயா? இப்படி எல்லாம் ரொம்பவுமே பெருமையோடு வரலாற்றைக் கொண்டாடுபவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
எனக்காகச் சில நிமிடங்கள் ஒதுக்கி, உங்கள் வரலாறு என்னை எப்படிப் பதிவு செய்து வைத்திருக்கிறது என்று கொஞ்சம் பார்த்துச் சொல்ல முடியுமா? நீங்கள் கொண்டாடும் வரலாற்று மேதைகள் என் வாழ்வை எப்படி எல்லாம் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்றும் என்னைப் பற்றி என்னவெல்லாம் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியுமா? நான் பார்த்த எல்லாப் புத்தகங்களிலும் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். ‘கிளியோபாட்ரா ஒரு மாபெரும் அழகி. அவர் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது.’
What's Your Reaction?