ஹிட்லரின் நெருக்கமான நண்பர் - ருடால்ஃப் ஹெஸ் | கல்லறைக் கதைகள் 19
சோஷலிஸ்டு கட்சியின் நிகழ்வொன்றில் ஹிட்லர்-ஹெஸ் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அன்று முதல் ஹெஸ், ஹிட்லரின் நெருங்கிய சகாவானார். 1933ஆம் ஆண்டுவரை அவருடைய துணை நிர்வாகியாகவும், அவருடைய அந்தரங்கச் செயலாளராகவும் பணியாற்றினார்.

இரண்டாவது உலகபோர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். ஹிட்லரின் நாஜிப் படை தோல்வியும் வெற்றியும் மாறி மாறி ஹிட்லருக்குச் சந்தோஷத்தையும் கோபத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தது. சோவியத் ரஷ்யாவுடன் தாக்குதல் நடத்த ஜெர்மன் திட்டமிட்டிருந்த நேரம் அது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உலக நாடுகளை, முக்கியமாக பிரிட்டனை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் அது.
1941ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி இரவு. இங்கிலாந்தில் எல்லையோரமாக உள்ள ஒரு கிராமம். டேவிட் மக் லீன் என்கிற விவசாயி, வரலாற்றில் தனது பெயர் குறிப்பிடப்போகும் நாளாக அன்றைய தினம் இருக்கப்போவதை அறியாமல், தூங்கச் சென்றார். ஒரு விமானத்தின் சத்தம் மிக அருகே கேட்டது. வெடி வெடித்ததைப் போல அவரது வீடு அதிர்ந்தது. பதறியடித்து வெளியே வந்து பார்த்தார். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. கொஞ்ச தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய்ப் பார்த்தார்.
What's Your Reaction?