போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை. 

Jul 16, 2025 - 12:45
 0  5
போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

இந்தியாவின் காலநிலை, மண்வளம், வேளாண்மை, இயற்கைத் தாவரங்கள், உற்பத்தி யாகும் பொருள்கள், கிடைக்கும் தாதுப் பொருட்கள், இந்தியாவில் பாயும் ஆறுகள், அவை உற்பத்தியாகும் இடங்கள், பாயும் மாநிலங்கள் போன்றவை, காடுகள், சரணாலயங்கள், பல்நோக்குத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியும் பட்டியலிட்டு, குறிப்புகள் எடுத்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும்.

இவை தவிர, இந்தியப் புவியியல் பற்றிய சில முக்கியக் குறிப்புகளைத் தெரிந்து கொள்வது நல்லது. ஆசியக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது மிகப் பெரிய நாடான இந்தியாவின் குறுக்கே கடகரேகை (20°30' வடக்கு அட்சம்) சென்று இந்திய நாட்டைத் தீபகற்ப இந்தியா, புற தீபகற்ப இந்தியா என இரண்டு பகுதி களாகப் பிரிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow