சினிமாவும் அரசியலும் 1: அரசியல் கைதிகளின் அசராத இதயம்

வலிமையானவர்களாக நீங்கள் மாற விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். இன்னும்கூட உங்கள் வலிமையை அதிகரித்துக்கொள்ள விரும்பினாலும் தவறாமல் இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள்.

Oct 15, 2025 - 18:40
 0  3
சினிமாவும் அரசியலும் 1: அரசியல் கைதிகளின் அசராத இதயம்

சுதந்திர வேட்கையுள்ள கொள்கைப்பிடிப்புள்ள மானுட நேசமுள்ள ஒரு மனிதன் எத்தகைய சித்ரவதைகளையும் தாண்டி அதிகாரத்தை வென்றெடுப்பான் என்பதற்குப் பெரும் புரட்சிகளிலிருந்து சிறு போராட்டங்கள் வரை எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும், இப்போது, இந்த வேளையில் உதாரணமாக ஒரு திரைப்படத்தைச் சொல்ல நினைக்கிறேன். அந்தத் திரைப்படம் 2018ஆம் ஆண்டு உருகுவேயிலிருந்து வெளிவந்த ‘பன்னிரண்டு ஆண்டு இரவுகள்.’

1917இல் வெற்றிபெற்ற ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து, சீனா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளிலும் புரட்சிக்கான தேவை இருந்ததால், விவசாயிகளின் தலைமையில், தொழிலாளர்களின் தலைமையில் அரசாங்கம் அழகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆசியா கண்டத்தில் மட்டுமல்லாமல் கியூபா போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும் புரட்சியின் அலை பேரலையாகப் பிரவாகமெடுக்கத் தொடங்கிருந்தது. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த புரட்சியில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து இடதுசாரி அரசை அமைத்துவிட்டார்கள் புரட்சிகரத் தோழர்கள். அப்படியென்றால் அந்த நெருப்பு தென்னமெரிக்கக் கண்டமெங்கும் எப்படிப் பரவியிருக்குமென்று நினைத்துப் பாருங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow