கிறிஸ்துவமும் கம்யூனிசமும்

மக்கள் தொண்டும் கடவுளுக்கான தொண்டும் வேறு வேறு அல்ல என வாழும் கிறிஸ்துவர்கள் உண்டு. சமயத்தைத் தள்ளிவைத்துவிட்டுச் சமூக நலனில் மட்டுமே அக்கறை செலுத்திய கம்யூனிஸ்ட்களும் உண்டு.

Dec 25, 2024 - 10:10
 0  5
கிறிஸ்துவமும் கம்யூனிசமும்

மக்கள் தொண்டும் கடவுளுக்கான தொண்டும் வேறு வேறு அல்ல என வாழும் கிறிஸ்துவர்கள் உண்டு. சமயத்தைத் தள்ளிவைத்துவிட்டுச் சமூக நலனில் மட்டுமே அக்கறை செலுத்திய கம்யூனிஸ்ட்களும் உண்டு. கிறிஸ்துவத்தையும் கம்யூனிசத்தையும் ஒரு ஜன்னலின் இரு பக்கங்களாகக் கருதுவது அரிதானதொரு அணுகுமுறை. உலகம் விசித்திரமான மனிதர்களின் சங்கமமாக இருப்பதே, அதன் தீராத வசீகரமாக இருக்கிறது. தமிழகமும் அத்தகைய சில ஆளுமைகளைக் கண்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் ஐசக் அருமைராஜனால் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் என்கிற நிலைப்பாட்டைச் சிந்திக்க முடிந்தது. ஐசக் அருமைராஜன் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் 1970லிருந்து எழுதத் தொடங்கினார். கிறிஸ்துவத்தைச் சமய நோக்கில் பின்பற்றுவதைக் காட்டிலும், அதை ஒரு வாழ்வியல் நெறியாக அணுகுவதில் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. சக மனிதர்கள் நன்மை தீமை இடையிலான வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமலோ, தீமைக்குத் துணைபோவதாகவோ வாழ்வது குறித்த கேள்விகள் அவருக்கு இருந்தன. குறிப்பாக, கிறிஸ்துவர்கள் இந்த நெருக்கடிக்கு அடிபணியக் கூடாது என அவர் நினைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow