தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழப்புக்கு யார் பொறுப்பு?

சென்னை கண்ணகி நகரில் உள்ள ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குடியிருப்’பில் வசித்துவந்த தூய்மைப் பணியாளர் ஆர்.வரலட்சுமி (30), சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவால் ஆகஸ்ட் 23 அன்று அதிகாலை மரணமடைந்தார்.

Aug 24, 2025 - 08:30
 0  2
தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழப்புக்கு யார் பொறுப்பு?

சென்னை கண்ணகி நகரில் உள்ள ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குடியிருப்’பில் வசித்துவந்த தூய்மைப் பணியாளர் ஆர்.வரலட்சுமி (30), சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவால் ஆகஸ்ட் 23 அன்று அதிகாலை மரணமடைந்தார். இவருக்கு 11 வயதில் மகளும் 8 வயதில் மகனும் உள்ளனர். தூய்மைப்பணியாளராகப் பணியாற்றிவந்த இவரது வருமானத்தை நம்பித்தான் இவர்களது குடும்பம் இருக்கிறது.

வரலட்சுமி உடனடியாக இறந்துவிட்டதால் மட்டுமே இது பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால், தூய்மைப் பணி யாளர்கள் அனைவரும் ஒரு வகையில் ‘தாமதப்படுத்தபட்ட மரண’த்துக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டுத்தான் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்துவிதமான கழிவு களைக் கையாள்வதற்கான கருவிகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. குறைந்தபட்சம் கையுறை, காலுறை, முகக்கவசம் போன்றவைகூட இல்லாத நிலையில்தான் பலரும் பணியாற்றிவருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow