ஒற்றைப் பனை மரம் - திரைப் பார்வை | இதுவும் ஈழம்தான்!

போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளைச் சக மனிதர்கள் சிலர் கேட்கின்றனர்.

Nov 11, 2024 - 15:48
 0  3
ஒற்றைப் பனை மரம் - திரைப் பார்வை | இதுவும் ஈழம்தான்!

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’.

2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow