உலக அளவில் உதகைக்கு பெருமை சேர்க்கும் ‘ஹோம்மேட் சாக்லேட்’
இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் சுய தேவைகளுக்காக அவரவர் வீடுகளிலேயே சாக்லேட்டை தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டிய வழிதான் இன்றைக்கு நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள உதகையின் ஹோம் மேட் சாக்லேட்டாகும்.

உதகை: குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவருமில்லை. மெக்சிகன் வார்த்தையான சாக்லேட் ஆரம்ப காலத்தில் திரவநிலையிலேயே இருந்தது. இதை அப்படியே குடிக்கலாம். அதையடுத்து 12-ம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவில் பிரபலமடைந்திருந்த சாக்லேட் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்களும் பின்பற்றத் தொடங்கினர். அதிலிருந்தே உலகெங்கும் சாக்லேட் பிரபலமானது.
இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் சுய தேவைகளுக்காக அவரவர் வீடுகளிலேயே சாக்லேட்டை தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டிய வழிதான் இன்றைக்கு நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள உதகையின் ஹோம் மேட் சாக்லேட்டாகும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உதகை, கொடைக்கானல் உட்பட குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே ஹோம் மேட் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
What's Your Reaction?