ஆண்பாவம் பொல்லாதது: ஓர் அட்டகாச வரவு | திரைப் பார்வை

தன்னுடைய வாழ்க்கையில் விழுந்த விரிசல்களின் கதையை, நான்கு முக்கிய சம்பவங்களாக அவன் தேடி வந்த வழக்கறிஞரான நாராயணனிடம் நறுக்கென்று சுருக்கிச் சொல்லும் விதமும் அதற்கு அவரது எதிர்வினைகளும் ஜெட் ஸ்பீட்

Oct 31, 2025 - 20:15
 0  3
ஆண்பாவம் பொல்லாதது: ஓர் அட்டகாச வரவு | திரைப் பார்வை

மென்பொருள் நிரலர் ஆகப் பணிபுரியும் சிவாவும் (ரியோ ராஜ்), பணக் கஷ்டம் தெரியாமல் வளர்ந்த சக்தியும் (மாளவிகா) பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தின் வழியாக இல்லறத்தில் கரம் பற்றுகிறார்கள். மனைவியின் உணர்வுகளுக்குச் சரி சமமான மதிப்பளிக்க நினைக்கும் சிவா, கட்டுப்பெட்டியான பெற்றோரின் வளர்ப்பில் ஆளானவன் என்றாலும் கொஞ்சம் கன்சர்வேடிவ் ஆக இருக்கிறான்.

சக்தியோ அனைத்திலும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு தன்னை ‘ஸ்காலர்’ என எண்ணிக்கொண்டு குறும்பும் கொண்டாட்ட மனமும் கொண்ட பெண்ணாகச் சக்தியின் பொறுமையை அடிக்கடி சோதிக்கிறாள். தொடக்கத்தில் நன்றாகச் செல்லும் இந்த ஜென் இசட் தலைமுறையின் அன்றாட வாழ்க்கையில் மெல்ல மெல்ல ‘டாம் அண்ட் ஜெர்ரி’ மனநிலை எட்டிப்பார்க்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக முற்றி அவர்களை எந்த எல்லையில் கொண்டுபோய் நிறுத்தியது என்பது கதை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow