எல்லை மீறும் இணையப் பயன்பாடு: குழந்தைகளுடன் ஓர் ஒப்பந்தம்!

விரல்நுனியில் தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுவதில் தொடங்கும் குழந்தை, சில ஆண்டுகளில் பல செயலிகளைக் கையாளும் திறன்பெற்று வளர்கிறது.  அடுத்த மிகச் சில ஆண்டுகளிலேயே, சமூக வலைதளங்களில் இணையும் உந்துதலும் ஆர்வமும் தலைக்கேறிவிடுகிறது.

Dec 26, 2024 - 15:20
 0  3
எல்லை மீறும் இணையப் பயன்பாடு: குழந்தைகளுடன் ஓர் ஒப்பந்தம்!

ன்று வகைவகையான இணைய கருவிகளை இயக்கும் குழந்தைகளைக் கண்காணிக்கப் பெற்றோர் பயன்படுத்தக்கூடிய ‘tech contracts’ என்கிற பெயரில் ஒப்பந்தங்கள் வந்துவிட்டன. அவரவர் குடும்பங்களுக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது மாற்றிக்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள் இவை. இந்த ஒப்பந்தங்கள், பிள்ளைகள் எல்லை மீறாமல் இணையத்தைப் பயன்படுத்தவும் மீறியபோது பாதுகாத்திடக் குடும்பமே அரணாக நிற்கவும் பேருதவி புரிவன.

இன்று பரவலாக வந்துவிட்ட தொழில்நுட்ப ஒப்பந்தங்களைப் பார்க்கும்போது, ‘வருமுன்னர்க் காவாதான்..’ எனத் தொடங்கும் குறள்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு செயல் தவறாகக்கூடிய வாய்ப்பிருப்பதை முன்கூட்டியே அறிந்து, அச்செயலால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளாதவரின் வாழ்க்கை, நெருப்பின்முன் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போலக் கருகிவிடும் என்று தெளிவாக விளக்கி எச்சரித்த வள்ளுவரும் அவர்தம் தொலைநோக்கும் வியக்க வைக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow