பிரபுதேவாவின் முதல் லைவ்! - சிறப்பு முன்னோட்டம்

பான் இந்திய நட்சத்தி ரங்களின் படையெடுப்பு இன்றைக்குப் பிரபலமாக இருக்கலாம். ஆனால், 25 வருடங்களுக்கு முன்பே தன்னுடைய நடனத்தின் வழியாக இந்தியர்களின் இதயங்களை வென்றெடுத்தவர் பத்மஸ்ரீ பிரபுதேவா. பரதம், ஃபோக், வெஸ்டர்ன் ஆகியவற்றின் அட்டகாசமான கலவையில்

Jan 17, 2025 - 13:35
 0  2
பிரபுதேவாவின் முதல் லைவ்! - சிறப்பு முன்னோட்டம்

பான் இந்திய நட்சத்தி ரங்களின் படையெடுப்பு இன்றைக்குப் பிரபலமாக இருக்கலாம். ஆனால், 25 வருடங்களுக்கு முன்பே தன்னுடைய நடனத்தின் வழியாக இந்தியர்களின் இதயங்களை வென்றெடுத்தவர் பத்மஸ்ரீ பிரபுதேவா. பரதம், ஃபோக், வெஸ்டர்ன் ஆகியவற்றின் அட்டகாசமான கலவையில் இவர் வடிவமைத்து ஆடும் நடனங்களில் ஊற்றெடுக்கும் ‘எனர்ஜி’, பார்க்கும் எவரையும் தீயெனப் பற்றிக்கொள்ளும். இவரின் கால்கள், கைகள், உடல், முகம் என ஒவ்வோர் அங்கமும் காட்டும் வேகமும் அவற்றின் வித்தைகளையும் பார்த்து, ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என்று உலகத்தின் உதடுகள் உச்சரித்து மகிழ்கின்றன. ஆனால் இவர், மைக்கேல் ஜாக்சனையும் விஞ்சும் ‘திரவ அசைவு’களைத் (Fluid movements) தன் உடலில் வழியவிடுகிற ஜிலீர் கலைஞன்! இவருடைய நடனக் கற்பனையில் உருவான திரையிசைப் பாடல்களின் தாக்கம், இரண்டாம் தலைமுறையிலும் பல நூறு புதிய திறமையாளர்களை உருவாக்கியிருக்கிறது.

இப்போதுவரை இளமையாக, தன் நடன பாணியில் புதுமைகளைப் புகுத்தியபடி துளியளவும் துவளாமல் தன் கலை வாழ்வின் உச்சத்தில் இருக்கும் பிரபுதேவா, முதல் முறை யாகத் தன்னுடைய 3 மணிநேர ‘லைவ்’ நடன நிகழ்ச்சியை வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதற்காகக் கடந்த 1 மாத காலமாக நடன ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியை அருண் ஈவண்ட்ஸ் ஒருங்கிணைத்து நடத்துகிறது. ‘தி கிங் ஆஃப் டான்ஸ் - பிரபுதேவாவின் ‘வைப்’ (The King of Dance - Prabhudeva’s VIBE - Live in Dance Concert) எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை டிக்கெட் விற்பனையுடன் அறிமுகப்படுத்தும் ஊடகச் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் பிரபுதேவா, வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow