மன நலப் பாதிப்பு: தனி மனிதப் பிரச்சினையா? | மனதின் ஓசை 2

வளரிளம் பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான, இன்றியமையாத வளர்ச்சிக் கட்டம். ஒருவர் தனது சமூகத் திறன், உணர்வுரீதியான புரிதல், மீளும் திறன் (Resilience) ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளக்கூடிய முக்கியமான பருவமும் இதுதான்.

Nov 27, 2024 - 13:05
 0  4
மன நலப் பாதிப்பு: தனி மனிதப் பிரச்சினையா? | மனதின் ஓசை 2

வளரிளம் பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான, இன்றியமையாத வளர்ச்சிக் கட்டம். ஒருவர் தனது சமூகத் திறன், உணர்வுரீதியான புரிதல், மீளும் திறன் (Resilience) ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளக்கூடிய முக்கியமான பருவமும் இதுதான். ஆரோக்கியமான தூக்கம், சீரான உடற்பயிற்சி, சக மனிதர்களை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் போன்ற ஆரோக்கியமான மனநலப் பழக்கங்கள் இந்தப் பருவத்தில்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

ஆனால், மனநலத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய போதைப் பழக்கம், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது போன்ற வற்றுக்கு அறிமுகமாகக்கூடிய பருவமும் இதுதான். இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான மன உறுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow