நாய்க்கடி: அலட்சியம் தரும் ஆபத்து
தெருநாயைச் சாக்கடையில் இருந்து காப்பாற்றும் போது நாயிடம் கடிபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் எனும் கபடி வீரர் ரேபிஸ் நோய் ஏற்பட்டுத் துடிதுடித்த காணொளி சமூக வலைத் தளங்களில் அண்மையில் வைரல் ஆனது.

தெருநாயைச் சாக்கடையில் இருந்து காப்பாற்றும் போது நாயிடம் கடிபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் எனும் கபடி வீரர் ரேபிஸ் நோய் ஏற்பட்டுத் துடிதுடித்த காணொளி சமூக வலைத் தளங்களில் அண்மையில் வைரல் ஆனது. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழக்கும் செய்திகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் ரேபிஸ் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான தகவல்களைப் பற்றியும் அறிவோம்.
வைரஸ் தொற்று: ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று. இந்தியாவில் இந்தத் தொற்று பெரும்பாலும் நாய்களிடமிருந்தும் (95%), பூனைகள் (2%), நரி, கீரிப்பிள்ளை (1%) உள்ளிட்ட விலங்கு களிடமிருந்தும் பரவுகிறது. ரேபிஸ் வைரஸ் தொற்றுடைய நாயோ பூனையோ மனிதர்களைக் கடிக்கும்போதோ, பிராண்டும்போதோ அல்லது காயமுற்ற பகுதயில் நக்கும் போதோ மனிதர்களின் வாயில், கண்ணில் அதன் எச்சில் படும்போதோ ரேபிஸ் வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் செல்கிறது.
What's Your Reaction?