நாகமலை குன்றுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை!
நெடுந்தூர வலசை பறவைகளான சாம்பல் கழுத்துக் கூம்பலகன், நீலப் பூங்குருவி, மரக் கதிர்குருவி, சேற்றுப் பூனைப்பருந்து, வெண்தொண்டை காட்டுக் கதிர்குருவி ஆகியவை ஆய்வில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் நாகமலை குன்று தமிழ்நாட்டின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாகத் தமிழ்நாடு அரசால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பறவைகள் ஆய்வில் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் இருந்து வெகு தூரம் பயணித்து வலசை வந்திருக்கும் பறவைகள் வாழ்வது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுந்தூர வலசை பறவைகளான சாம்பல் கழுத்துக் கூம்பலகன், நீலப் பூங்குருவி, மரக் கதிர்குருவி, சேற்றுப் பூனைப்பருந்து, வெண்தொண்டை காட்டுக் கதிர்குருவி ஆகியவை ஆய்வில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பறவைகள் ஆய்வை சுந்தரமாணிக்கம், மகேஷ்வரன், சூழல் அறிவோம் குழுவினர் முன்னெடுத்தனர்.
What's Your Reaction?