மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா மனு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Nov 6, 2025 - 17:55
 0  3
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா மனு!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு, பதில் அளிக்க காவல் துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow