சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதையை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 17-ம் தேதி முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்க உள்ளன. ஆன்லைன் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர். இதற்காக கடந்த நவ.1-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கின. மாதாந்திர வழிபாட்டுக்கு வனப் பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
What's Your Reaction?