ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன் னேற்பாடு பணிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்

Jun 17, 2025 - 19:55
 0  3
ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. யாகசாலை பூஜை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow