மாதாந்திர பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

மாதாந்திர பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிப்ரவரி 12-ம் தேதி நடைதிறக்கப்பட உள்ளது.

Feb 2, 2025 - 04:45
 0  2
மாதாந்திர பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

தேனி: மாதாந்திர பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிப்ரவரி 12-ம் தேதி நடைதிறக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, தரிசனத்துக்கான முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26-ல் மண்டல பூஜை, ஜனவரி 14-ல் மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 20-ம் தேதி நடை சாத்தப்பட்டது. அதையடுத்து, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் சாவியை பந்தளம் மன்னர் பிநிதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow