வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி என்ற தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு விலை சரிவு

வெளிநாடுகளிலிருந்து ரோஜா இறக்குமதி செய்யப்படுவதாக வெளியாகி வரும் தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு விலை சரிந்துள்ளது. இதனால், காதலர் தின வர்த்தகத்தை நம்பியிருந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Feb 2, 2025 - 04:55
 0  3
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி என்ற தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு விலை சரிவு

ஓசூர்: வெளிநாடுகளிலிருந்து ரோஜா இறக்குமதி செய்யப்படுவதாக வெளியாகி வரும் தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு விலை சரிந்துள்ளது. இதனால், காதலர் தின வர்த்தகத்தை நம்பியிருந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் பசுமைக் குடில் அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாஜ்மஹால் (சிவப்பு) நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இம்மலர்கள் கடந்த காலங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினக் கொண்டாட்டத்தின்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக காதலர் தினத்துக்கு தாஜ்மஹால், அவலாஞ்சி ரக மலர்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு விற்பனைக்குச் சென்றன. மேலும், சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow