திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது

Nov 11, 2024 - 15:43
 0  5
திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

விழாவின் முதல்நாளான நவ. 2-ம் தேதி அதிகாலை ஜெயந்திநாதப் பெருமான் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பகல் 2.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து கிரி வீதி வழியாக உலா வந்து திருக்கோயிலை சேர்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow