வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு

நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புகழ்​பெற்ற புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில், இறந்த குருக்​கள், உறவினர்களின் ஆன்​மாவுக்கு மரி​யாதை செலுத்​தும் வகை​யில் நேற்று கல்​லறை திருநாளாக அனுசரிக்​கப்​பட்​டது.

Nov 3, 2025 - 07:40
 0  2
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்: ஆண்​டு​தோறும் நவ. 2-ம் தேதியை கல்​லறை திரு​நாளாக கிறிஸ்​தவர்​கள் அனுசரிப்​பது வழக்​கம். இதையொட்​டி, நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள புகழ்​பெற்ற புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில், இறந்த குருக்​கள், உறவினர்களின் ஆன்​மாவுக்கு மரி​யாதை செலுத்​தும் வகை​யில் நேற்று கல்​லறை திருநாளாக அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்​டி, பேராலய அதிபர் இருதய​ராஜ் தலை​மை​யில் சிறப்பு திருப்​பலி நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கிறிஸ்​தவர்​கள், வேளாங்​கண்ணி பேரால​யத்தை சுற்றி அடக்​கம் செய்​யப்​பட்ட பாதிரி​யார்​கள் மற்​றும் தங்​களது உறவினர்​களின் கல்​லறை​களை சுத்​தம் செய்​து, பூக்​களால் அலங்​கரித்​து, உணவுப் பண்​டங்​களை வைத்து படையலிட்​டு, மெழுகு​வத்தி ஏற்​றி, சிறப்பு வழி​பாடு நடத்​தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow