பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - திருமூர்த்தி மலையில் ஆடி பெருக்கு பூஜைகள் நிறுத்தம்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருமூர்த்தி மலையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் பூஜைகள் நிறுத்தப்பட்டு, பக்தர்களை வெளி யேற்றும் பணி நடைபெற்றது

உடுமலை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் பூஜைகள் நிறுத்தப்பட்டு, பக்தர்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாக அமைந்துள்ள திருமூர்த்தி மலை, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களில் ஒன்றாக உள்ளது. அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே குன்றில் எழுந்தருளியிருப்பதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?