மயிலாப்பூர் கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தி அணிவித்தார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார்.

Oct 6, 2025 - 11:50
 0  4
மயிலாப்பூர் கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தி அணிவித்தார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

சென்னை: காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.

பின்னர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை வழங்குகையில், ஆதிசங்கரரின் திரிபுர சுந்தரி மானச பூஜை ஸ்தோத்திரம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவற்றின் குறிப்புடன், தேவிகளுக்கு அலங்காரம் செய்யும் ஆதிசங்கரர் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow