தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா: அம்மையப்பர் திருக்கல்யாணம் கோலாகலம்
ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவில் சனிக்கிழமை காலை அம்மையப்பர் தவம் பெற்ற நாயகி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவில் சனிக்கிழமை காலை அம்மையப்பர் தவம் பெற்ற நாயகி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகும். சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாக பெருந்திருவிழாவில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் வைபவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது.
What's Your Reaction?