மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Apr 29, 2025 - 19:45
 0  15
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தைச் சுற்றியுள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அப்போது சுவாமி சன்னதியிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சி்ம்மாசனத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரம் முன்பு வெள்ளி சிம்மாசனத்தில் 10.35 மணியளவில் எழுந்தருளினர். யாகசாலை அமைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.48 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தர்ப்பைப்புல், மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கொடிமரத்தின் மேலிருந்து மலர்கள் தூவினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow