கர்நாடகாவின் மகாவிஷ்ணு சிலைக்கு திருச்சியில் இருந்து 45 அடி நீள வெட்டிவேர் மாலை அனுப்பி வைப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்துள, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது.

Feb 28, 2025 - 17:15
 0  4
கர்நாடகாவின் மகாவிஷ்ணு சிலைக்கு திருச்சியில் இருந்து 45 அடி நீள வெட்டிவேர் மாலை அனுப்பி வைப்பு

திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்துள, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருவண்ணாமலையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஒரே கல்லிலான 108 அடி உயரம் கொண்ட மகாவிஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. அதையடுத்து, பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு ராமேஸ்வரத்தில் உள்ள வெட்டிவேர் சங்கம் சார்பில், 45 அடி நீளம் கொண்ட வெட்டிவேர் மாலை தயாரிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow