மதநல்லிணக்க திருவிழா | மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் @ ராமநாதபுரம்
முஸ்லிம்களின் நீத்தார் நினைவு நாளான மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சமய நல்லிணகத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இந்துக்கள் தீ மிதித்து மொகரம் பண்டிகையை கடைப்பிடித்தனர்.

ராமேசுவரம்: முஸ்லிம்களின் நீத்தார் நினைவு நாளான மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சமய நல்லிணகத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இந்துக்கள் தீ மிதித்து மொகரம் பண்டிகையை கடைப்பிடித்தனர்.
கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் உசைன் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளை மொகரமாக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் கடைப்பிடிக்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடுவதாக அறியப்பட்ட இந்த பண்டிகையை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள இந்துக்களும் காலம் காலமாக கடைபிடிக்கின்றனர்.
What's Your Reaction?