ஆர்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்: டிச.25-ம் தேதி வெள்ளி ரத ஊர்வலம்
வடசபரி என்று போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படியுடன் பரிவார தெய்வங்களுடன் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. 25-ம் தேதி வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறுகிறது.
வடசபரி என்று போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படியுடன் பரிவார தெய்வங்களுடன் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி கட்டி, பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
What's Your Reaction?