மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..! | மார்கழி மகா உற்சவம் 4

கடல் போன்ற கருணை உள்ளம்  படைத்த வருண பகவானே! கடலுள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகாயத்தில் ஏறி, மழையை வரவைப்பாய். பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய்வாய்.

Dec 20, 2024 - 08:45
 0  3
மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..! | மார்கழி மகா உற்சவம் 4

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் | ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ||
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் | பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ||
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து | தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் ||
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் | மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ||

(திருப்பாவை 4)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow