காட்டைக் காப்பாற்றும் பணி | இதோ வேலை!

இயற்கை வளங்களுள் காடுகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் முக்கியமானவை. வனம் - வனவிலங்குகள் பாதுகாப்பு, மாசற்ற சுற்றுப்புறத்தை உருவாக்கும். இப்பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் உத்வேகத்தைத் தற்கால இளைஞர்கள் மத்தியில் அதிகமாகக் காண முடிகிறது.

Nov 27, 2024 - 13:05
 0  4
காட்டைக் காப்பாற்றும் பணி | இதோ வேலை!

இயற்கை வளங்களுள் காடுகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் முக்கியமானவை. வனம் - வனவிலங்குகள் பாதுகாப்பு, மாசற்ற சுற்றுப்புறத்தை உருவாக்கும். இப்பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் உத்வேகத்தைத் தற்கால இளைஞர்கள் மத்தியில் அதிகமாகக் காண முடிகிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் இந்திய வன சேவை (IFS) தேர்வில் வென்றால் மாவட்ட, மாநில, மத்திய அளவில் முக்கிய அதிகாரிகளாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். ஐ.எஃப்.எஸ். தேர்வை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் நடத்துகிறது. 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

தகுதி: பொது வயது வரம்பு 21 முதல் 32 வரை. இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் ஆகியோருக்கு முறையே 3 வருடங்கள், 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் வனவியல், கணிதம், தாவரவியல், வேதியியல், புவியியல், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், வேளாண்மை, விலங்குகள் அல்லது கால்நடை அறிவியல், பொறியியல் என ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது மேற்கூறிய பட்டப் படிப்புகளுக்குச் சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை upsconline.nic.in என்கிற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow